/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகார வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
குப்பை விவகார வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 15, 2025 01:05 AM
பல்லடம்: திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை இடுவாய் கிராமத்தில் கொட்டுவதற்கு, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்துவருகிறது.
இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஆகியவை நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. மேலும், இன்று) நடந்த விசாரணையின்போது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே, நம் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அடுத்த கட்ட போராட்டம் குறித்து, நாளை (இன்று) காலை, 7.00 மணிக்கு, இடுவாயில் உள்ள சின்னம்மன் கோவில் மண்டபத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

