/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குப்பை' யான குப்பை சேகரிப்பு உபகரணங்கள்; துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
/
'குப்பை' யான குப்பை சேகரிப்பு உபகரணங்கள்; துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
'குப்பை' யான குப்பை சேகரிப்பு உபகரணங்கள்; துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
'குப்பை' யான குப்பை சேகரிப்பு உபகரணங்கள்; துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 14, 2025 08:10 PM

உடுமலை; உடுமலை நகராட்சியில், குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தள்ளுவண்டி மற்றும் சேகரிப்பு உபகரணங்கள் உடைந்துள்ளதால், துாய்மை பணியாளர்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
உடுமலை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட துாய்மைப்பணியாளர்கள் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரித்து, மக்கும் குப்பை, நுண் உரக்குடில்கள் வாயிலாக, உரமாக மாற்றப்பட்டும், மக்காத கழிவுகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணிக்காக, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட, உபகரணங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், முறையாக பராமரிக்கப்படாமல், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தள்ளுவண்டிகள் அனைத்தும், பல இடங்களில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. அதே போல், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்கப்பட்ட பிளாஸ்டிக் டிரம்கள் அனைத்தும் சிதிலமடைந்த நிலையில், அதையே பயன்படுத்த வேண்டிய அவல நிலையும், அதனால், வீதிகளில் குப்பை, கழிவுகள் சிதறும் நிலையும் உள்ளது.
அதே போல் 33 வார்டுகளுக்கு, 33 பேட்டரி வாகனங்கள் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பேட்டரி வாகனங்கள் பராமரிக்காமல், பழுதடைந்து வருகின்றன.
பழுதான பேட்டரி வாகனங்கள் மாட்டுத்தொழுவம் மற்றும் நகராட்சி வளாகத்தில், பல மாதமாக வீணாக நிறுத்தப்பட்டுள்ளது.
துாய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று, குப்பை, கழிவுகள் சேகரிக்கும் உபகரணங்கள், வாகனங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில், துாய்மை பணியாளர்களுக்கான உபகரணங்களும் வழங்காமல், துாய்மை பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, துாய்மை பணியாளர்களுக்கு தேவையான குப்பை சேகரிப்பு உபகரணங்கள், பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.