/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை அள்ளும் பணி... தொய்வின்றி நடக்குமா? மனு அளித்த பா.ஜ., கேள்வி
/
குப்பை அள்ளும் பணி... தொய்வின்றி நடக்குமா? மனு அளித்த பா.ஜ., கேள்வி
குப்பை அள்ளும் பணி... தொய்வின்றி நடக்குமா? மனு அளித்த பா.ஜ., கேள்வி
குப்பை அள்ளும் பணி... தொய்வின்றி நடக்குமா? மனு அளித்த பா.ஜ., கேள்வி
ADDED : நவ 04, 2024 10:40 PM
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல், குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் - அவிநாசி ரோடு, ராக்கியாபாளையத்தில், நெடுஞ்சாலைத்துறையால், ரோட்டின் மையத்தடுப்பு நீண்ட துாரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மையத்தடுப்பு துாரத்தை குறைத்து, வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கவேண்டும். திருப்பூர் நகரின் பிரதான சாலைகள், குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவ, மாணவியரும் தினமும் அவதிப்படுகின்றனர்.
பழுதடைந்த அனைத்து சாலைகளிலும், பேட்ஜ் ஒர்க் பணி மேற்கொள்ளவேண்டும். கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும், வீடுவீடாக குப்பை சேகரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கலெக்டர் தலையிட்டு, குப்பை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தவேண்டும். மழைக்காலம் என்பதால், மாநகரில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் துார்வாரவேண்டும். தொற்று நோய் பரவலை தடுக்க, கொசு மருந்து தெளிக்கவேண்டும். தெற்கு மின் மயானம் அருகே, கழிவுநீர் பாதாள சாக்கடைக்கு செல்லாமல், நேரடியாக நொய்யலாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்.

