/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை மேடான பி.ஏ.பி., கால்வாய் கரை
/
குப்பை மேடான பி.ஏ.பி., கால்வாய் கரை
ADDED : நவ 11, 2024 04:22 AM

சாக்கடை அடைப்பு
சின்னாண்டிபாளையம், சிவபுரத்தில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.
- சிங்காரம், சிவபுரம். (படம் உண்டு)
நடவடிக்கை தேவை
கொடுவாய், நிழலி, புத்தரச்சல் ரோடு, பங்கம்பாளையம் பிரிவு பி.ஏ.பி., கால்வாய் கரையில் குப்பை கொட்டப்படுகிறது. பாசன நீரில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்ரீஹரிணி, பங்கம்பாளையம் பிரிவு. (படம் உண்டு)
தெருநாய்த் தொல்லை
தென்னம்பாளையத்தில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நாய்கள் இங்கும், அங்கும் ஓடித் திரிவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.
- ராதா ஆனந்த், தென்னம்பாளையம். (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
சின்னாண்டிபாளையம் - ஆண்டிபாளையம் இடையே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். ரோடு போட வேண்டும்.
- மணி, சின்னாண்டிபாளையம். (படம் உண்டு)
திருப்பூர், பார்க் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் தடுமாறுவதால், தற்காலிகமாக 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், பார்க் ரோடு. (படம் உண்டு)
சாலையில் கழிவுகள்
பூலுவப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ரோட்டில் குப்பைகளுடன், இறைச்சிக் கழிவுகளும் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பை அள்ள வேண்டும்.
- சதாசிவம், பூலுவப்பட்டி. (படம் உண்டு)
வீதி முழுக்க கழிவுநீர்
அனுப்பர்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீதி முழுதும் வழிந்தோடி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- முத்துச்சாமி, அனுப்பர்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், 57வது வார்டு, திருக்குமரன் நகர் ஆறாவது வீதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவுநீர் சாலையில் ஓடி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- மதிவாணன், திருக்குமரன் நகர். (படம் உண்டு)
குப்பை தேக்கம்
திருப்பூர், திருவள்ளுவர் தோட்டம், ரோட்டரி கிளப் வீதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.
- சிராஜ், திருவள்ளுவர்தோட்டம். (படம் உண்டு)
பெருமாநல்லுார், பரமசிவம்பாளையம் - பொங்குபாளையம் ரோட்டில், ஒரு மாதமாக குப்பை அள்ளாமல், அப்படியே தேங்கி கிடக்கிறது. குப்பை அள்ள வேண்டும்.
- கவுதம், பொங்குபாளையம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், அனுப்பர்பாளையம், பெஸ்ட் கார்டன் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது.
- விஜி, அனுப்பர்பாளையம். (படம் உண்டு)
ஒளிராத விளக்கு
திருப்பூர், ரயில்வே கேட், கொங்கு மெயின் ரோட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- ராஜ், கொங்கு மெயின் ரோடு. (படம் உண்டு)
ரியாக் ஷன்
தற்காலிக சீரமைப்பு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, அணைக்காடு பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமானதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்காலிகமாக, குழியை மூட மண் கொட்டியுள்ளனர்.
- ஜெய்சங்கர், அணைக்காடு. (படம் உண்டு)
மின்கம்பம் மாற்றம்
அவிநாசி, நம்பியாம்பாளையம், எம்.நாதம்பாளையம் மேற்கு வீதியில் சாய்ந்த நிலையில், மின்கம்பம் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மின்கம்பத்தை மாற்றி விட்டனர்.
- செல்வா, எம்.நாதம்பாளையம். (படம் உண்டு)