/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு
/
குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு
ADDED : டிச 12, 2025 06:33 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த, இச்சிப்பட்டி கிராமத்தில் பயன்பாடற்ற பாறைக்குழி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம், மாலை, டிப்பர் லாரி ஒன்றில் இருந்து, பாறைக்குழிக்குள் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், லாரியை சிறை பிடித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாவதால், குப்பைகள் கொட்டக்கூடாது என்பதற்காக, பாறைக்குழியை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. அதையும் உடைத்துவிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத போது, மீண்டும் குப்பைகள் கொட்டி வருகின்றனர். விதிமுறை மீறி, குப்பைகளை கொட்டிய லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 'கொட்டிய குப்பைகளை திருப்பி எடுத்துச் சென்றால் மட்டுமே லாரியை விடுவிப்போம்' என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர். இதனையடுத்து, கொட்டப்பட்ட குப்பைகள் அதே லாரியில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன.

