/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டும் பிரச்னை; நா.த.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
குப்பை கொட்டும் பிரச்னை; நா.த.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குப்பை கொட்டும் பிரச்னை; நா.த.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குப்பை கொட்டும் பிரச்னை; நா.த.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 11:18 PM

திருப்பூர்; பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை தவிர்த்து முறையாக திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்த வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்னா மனோகர் தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
நிர்வாகிகள், சிவகுமார், சண்முகசுந்தரம், வான்மதி வேலுசாமி, அபிநயா, பி.ஏ.பி., சங்க வேலுசாமி உள்ளிட்ட பலர் பேசினர். பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோரை கைது செய்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் தற்போது, முதலிபாளையம் அருகிலுள்ள பாறைக்குழிகளில் கொட்டப்படுகிறது. இதனால், சுற்றுப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் மாசுபடுகிறது.
திடக்கழிவு மேலாண்மையில், குப்பை தரம் பிரித்தல், மின் உற்பத்தி, எரிவாயு உற்பத்தி நுண் உர உற்பத்தி ஆகியன மேற்கொள்ள வேண்டும். கையாள முடியாத குப்பைகளை மட்டும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பாறைக்குழி போன்ற வகையில் அழிக்க முயற்சிக்க வேண்டும்,' என்றனர்.