நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டு, நெருப்பெரிச்சல் திருமலை நகரில் முட்புதர் மண்டிய குட்டையில், மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை கொட்டி வந்துள்ளனர். அந்த குப்பையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்
இது குறித்து வார்டு கவுன்சிலர் முத்துசாமி, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.