/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி முன் குப்பை: சுகாதாரம் பாதிப்பு
/
பள்ளி முன் குப்பை: சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜன 17, 2025 11:42 PM

உடுமலை; உடுமலை, சத்திரம் வீதி நகராட்சி துவக்கப்பள்ளியின் முன், குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
உடுமலை, சத்திரம் வீதியில் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
மையத்தில், 20 குழந்தைகள் உள்ளனர். பள்ளி அமைந்திருக்கும் பகுதி வணிக வீதியாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும், பள்ளிக்குள் நுழைய முடியாத வகையில் வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் மாறிவிட்டது. குப்பைக்கழிவுகளும் தொடர்ந்து பள்ளிக்கு அருகில் குவிக்கப்படுகின்றன. பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதியினரிடம் தெரிவித்தாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை.
இதனால் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வகுப்பறைகளில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.
குப்பைக்கழிவுகளை அகற்றுவதற்கும், பள்ளியின் சுற்றுப்புற துாய்மையை மேம்படுத்துவதற்கும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.