/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரம் திணறும் மாநகராட்சி
/
குப்பை விவகாரம் திணறும் மாநகராட்சி
ADDED : அக் 26, 2024 11:10 PM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, பகுதியில் தினசரி 600 முதல் 700 டன் வரை குப்பை சேகரமாகி வருகிறது. குப்பைகளை கொட்ட மாநகராட்சிக்கென தனி இடம் இல்லை. ஆங்காங்கே உள்ள பயனற்ற பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.
பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையத்தில் உள்ள காலாவதியான பாறைக் குழியில் கொட்டப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் சுகாதார கேடு ஏற்படும். நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், மீண்டும் குப்பை கொட்டும் பணி நடைபெற்றது. குப்பை லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் சிறைப்பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், குப்பை கொட்டுவது தடைப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா, பொறியாளர் கண்ணன், தாசில்தார் மகேஸ்வரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மக்கள் மத்தியில் பேசிய அதிகாரிகள், 'முறையாக மருந்து அடித்து, துர்நாற்றம் வீசாத வகையில், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் குப்பை கொட்டப்படும்,' என்றனர். ஆனால், அதனை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. இதனால், பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.