/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரம்; த.வெ.க., ஆர்ப்பாட்டம்
/
குப்பை விவகாரம்; த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2025 11:22 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.இதில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். மாநகர் முழுக்க ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். வார்டுகளில் அடைபட்டுள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். தொய்வின்றி, தெரு விளக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மாவட்ட நிர்வாகிகள் ரவி, பாண்டியன், பாபு, சாமி, ராஜாராம், சரவணன் உட்பட அனைத்து பகுதி, கிளை, ஊராட்சி, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.