/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை மின்நிலையம் அருகே குப்பை மலை : எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் பொதுமக்கள்

ADDED : நவ 11, 2025 11:14 PM

திருப்பூர்: 'திருப்பூரில், துணை மின்நிலையம் உள்ள இடத்தில் குப்பை கொட்டப்படுவதால் தீ விபத்து நேரிடும்' என, மின்வாரியத்தினர் எச்சரித்தும், பொதுமக்கள் குப்பை கொட்டுகின்றனர்.
திருப்பூர் மங்கலம் ரோட்டில், பாரப்பாளையம் அருகே துணை மின் நிலையம் உள்ளது. சுற்றுவட்டார மக்கள் இங்குள்ள ரோட்டோரம் குப்பை கொட்டுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
பாலிதின் உட்பட அனைத்து வகை குப்பையும் கொட்டப்படுகின்றன. சில நேரங்களில் குவிந்து கிடக்கும் குப்பை, எரியூட்டப்படுவதால் தீ கிளம்பி, அப்பகுதி புகைமண்டலமாகிறது.'இந்த இடத்தை ஒட்டி துணை மின்நிலையம் இருப்பதால், இங்கு யாரும் குப்பை கொட்டக்கூடாது; தீ விபத்து நேரிடும்' என, மின்வாரியம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு 'பிளக்ஸ்' வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதை பொருட்படுத்தாமல், ரோட்டோரம் குப்பை கொட்டுவதை மக்கள் வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
எனவே, 'சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர், இங்கு குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இதை கட்டுப்படுத்த வேண்டும்' என, மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.