/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாற்றின் கரையில் குவியும் குப்பை!
/
நல்லாற்றின் கரையில் குவியும் குப்பை!
ADDED : ஜூன் 18, 2025 12:14 AM

திருப்பூர்; போயம்பாளையம் அருகே, நல்லாற்றின் கரையில் குப்பைகளை கொண்டு குவிக்கும் செயல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி, பூண்டி வழியாக திருப்பூரின் வடக்கு பகுதியில் கடந்து செல்லும் நல்லாறு அமைந்துள்ளது. ஆற்றில் பல இடங்களிலும் பல வகையிலும் கழிவு நீர் கலப்பது, கழிவுகள் தேங்கி நிற்பது, முட்புதர்கள் வளர்ந்தும், மண் மேடுகள் என பெரும்பாலும் ஆறு கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது.
இந்த ஆற்றை மேலும் மாசுபடுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம், நல்லாற்றின் கரையில், குப்பை கழிவுகள் தற்போது கொட்டப்பட்டுவருகிறது. மாநகரப் பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை எடுத்துச் செல்லும் ஊழியர்கள் இந்த இடத்தில் குப்பையை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால், ஏற்கனவே பாழ்பட்டு கிடக்கும் நல்லாறு மேலும் மோசமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. குப்பையில் சில நேரங்களில் தீ வைத்தும் விடுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
குப்பை கழிவில் வைக்கப்படும் தீ கடுமையான புகை மண்டலமாக மாறி, ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளை சோதிக்கிறது. இயற்கையான நீர் வழித்தடத்தில் குப்பைகளை கொண்டு சென்று கொட்டி அதை பாழ்படுத்தும் செயலை முற்றிலும் கைவிட வேண்டும்.