UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 05:24 PM

அ நிறம் | அளவு
கடும் வெப்பம் காரணமாக கொத்தமல்லி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் சாகுபடி பரப்பும் குறைந்துள்ள நிலையில், சந்தைக்கு வரத்தும் சரிந்துள்ளது. கொத்தமல்லி விலை கிடுகிடுவென உயர்ந்து, தற்போது ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனையாகிறது.
வரும் நாட்களில் மழைக்காலம் என்பதால், தொடர்ந்து மழை பெய்தால் கொத்தமல்லி அழுகும் நிலை ஏற்படும். மழை, வெயில் உள்ளிட்ட காரணிகளின் தாக்கத்துக்கு ஏற்ப விலை மாறுவதால், கொத்தமல்லி விலை எப்போது உயரும், எப்போது குறையும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.
