ADDED : நவ 19, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், காஸ் அடுப்பு பழுது நீக்கம் இலவச சர்வீஸ் முகாம் மற்றும் எரிவாயு பயன்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடுமலை பாரத்கேஸ் விநியோகஸ்தராக உள்ள, செல்வி கேஸ் நிறுவனத்தின் சார்பில் கேஸ் அடுப்பு பழுது நீக்கம், இலவச சர்வீஸ் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது.
செல்வி கேஸ் நிறுவன உரிமையாளர் அய்யப்பன் அடுப்பை பயன்படுத்தும் விதம், கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளித்தார்.
மேலும் கேஸ் அடுப்புகளை குறைந்தபட்சம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதால், கேஸ் கசிவு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் எனவும், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

