/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனநிறைவு அளித்தது; பெற்றோர் நெகிழ்ச்சி
/
மனநிறைவு அளித்தது; பெற்றோர் நெகிழ்ச்சி
ADDED : அக் 02, 2025 11:33 PM

''இ வ்வளவு பக்திபூர்வமாகவும், விமரிசையாகவும் எங்கள் குழந்தைக்கு 'வித்யாரம்பம்' நடத்துவோம் என்று எதிர்பார்க்கவே இல்லை; குழந்தைகளுக்கும், எங்களுக்கும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உள்ளது'' என்று 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் நடந்த 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோர் மற்றும் தாத்தா - பாட்டி ஆகியோர் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
திருப்தி தமிழ்ச்செல்வி, வெள்ளியங்காடு:
நான் குழந்தையாக இருந்த போது, 'வித்யாரம்பம்' செய்ததாக, என் பெற்றோர் கூறுவர். என் குழந்தைக்கும், வித்யாரம்பம் செய்ய வேண்டுமென நினைத்திருந்தேன். 'தினமலர்' நாளிதழை பார்த்து முன்பதிவு செய்தேன். சிறப்பு ேஹாமம் நடத்தி, பொதுவழிபாட்டுடன், வித்யாரம்பம் செய்தது எனக்கு மனத்திருப்தியாக இருக்கிறது.
சந்தோஷம் சுரேஷ்குமார், காந்தி நகர்:
என் முதல் குழந்தைக்கு, திருப்பூர் அய்யப்பன் கோவிலில், வித்யாரம்பம் செய்திருந்தேன். இரண்டாவது குழந்தைக்கும் அங்கு போகலாம் என்று இருந்தேன். செய்தியை படித்து, ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு வர முடிவு செய்தேன். வித்யாரம்பம் செய்து வைத்ததுடன், ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி, கல்வியை துவக்கி வைத்துள்ளது, மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிரமாண்டம் சுந்தரவடிவேலு, தெக்கலுார்: பேத்தி இனியாழுக்கு, வித்யாரம்பம் செய்திருக்கிறோம். கோவில்களில் சிறிய அளவில் வித்யாரம்பம் நடப்பதை பார்த்திருக்கிறோம்; இங்கு, மிக பிரமாண்டமாக, ேஹாம வழிபாடுகளுடன், இலவசமாக வித்யாரம்பம் செய்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை, குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
மறக்க முடியாது மகாலட்சுமி, அனுப்பர்பாளையம்:
மகள் கவின்பிரியாவுக்கு வித்யாரம்பம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் மனநிறைவாக இருக்கிறது. குடும்பத்துடன் வந்து, குழந்தைக்கு கல்வியை துவக்கியுள்ளது நிறைவாக இருக்கிறது; வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
சிறந்த ஏற்பாடு சூடேஸ்வரி, அவிநாசி:
மகன் சிவா ஆதவனுக்கு, தாத்தா -பாட்டியுடன் வந்து வித்யாரம்பம் செய்துள்ளோம். கோவில் மனமுருக வழிபாடு நடத்திவிட்டு, மங்களகரமான நாளில், நல்ல நேரத்தில் கல்வியை துவக்கி வைத்துள்ளோம். சிறப்பான ஏற்பாடு செய்திருந்த 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
எதிர்பார்க்கவில்லை கிருத்திகா, போயம்பாளையம்:
மகனுக்கு மிக எளிமையாக வித்யாரம்பம் செய்தோம்; மகள் மோனிகாவுக்கு, இவ்வளவு விமரிசையாக வித்யாரம்பம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. நடுத்தர மக்கள், வீடுகளில் இவ்வளவு செலவு செய்து கொண்டாட முடியாது; வேறு எங்காவது சென்றாலும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். முழுவதும் இலவசமாக செய்து, ஸ்கூல்பேக் பரிசாக வழங்கியது உற்சாகமாக இருக்கிறது.
புனித அனுபவம் சவுமியா, வெங்கமேடு:
கோவிலுக்கு செல்கிறோம். வெளியே சுற்றுலா செல்கிறோம். அதைவிட, ராஜராஜேஸ்வரி கோவிலில் வித்யாரம்பம் செய்தது புதிய அனுபவத்தை வழங்கியுள்ளது. குழந்தைக்கு கல்வி என்பது மிகமிக முக்கியம்; இன்று, சிறப்பு வழிபாடுடன், கல்வியை துவக்கி வைத்துள்ளதை பெருமையாக நினைக்கிறோம்.
தொலைவெனினும்... சங்கர், சாமளாபுரம், சோமனுார்:
தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை என, முன்பதிவு செய்து வந்தோம். குழந்தைகளுக்கு பரிசு வழங்கியது, 'போட்டோ' எடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மகிழ்ச்சி புஷ்பா, திருமுருகன்பூண்டி:
பேத்திக்கு, வித்யாரம்பம் செய்து வைக்கலாம் என்று இருந்தோம். 'தினமலர்' செய்தியை பார்த்து, முன்பதிவு செய்தோம். பள்ளியில் சேர்க்கவும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டோம். மங்களகரமான நாளில், குடும்பத்துடன் வந்து, கோவிலில் வித்யாரம்பம் செய்ததை, மறக்கவே முடியாது; அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதன்முறை ராஜசேகரன், அனுப்பர்பாளையம்:
பேரன் அக் ஷரவ்-க்கு, வித்யாரம்பம் செய்வது குறித்து பெற்றோர் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தனர். 'தினமலர்' வித்யாரம்ப நிகழ்ச்சிக்கு குடும்பமாக வந்து, சாதனையாளர்கள் மூலம், குழந்தைக்கு எழுத்தறிவித்தல் செய்து வைத்தது மனநிறைவாக இருக்கிறது; எங்கள் குடும்பத்தில், இன்று தான் முதன்முறையாக வித்யாரம்பம் செய்து வைத்திருக்கிறோம்.