/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கேலோ இந்தியா' தேர்வு போட்டி; ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
/
'கேலோ இந்தியா' தேர்வு போட்டி; ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
'கேலோ இந்தியா' தேர்வு போட்டி; ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
'கேலோ இந்தியா' தேர்வு போட்டி; ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 04, 2024 12:42 AM
திருப்பூர்: சென்னையில் நடக்கவுள்ள 'கேலோ இந்தியா' தேர்வு போட்டியில் பங்கேற்க, ஆர்வமுள்ளவர்களுக்கு மாவட்ட விளையாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் அறிக்கை: திருச்சியில் அண்ணா விளையாட்டு அரங்கில், குத்துச்சண்டை, சென்னை சிவந்தி ஆதித்தன் துப்பாக்கி சுடும் வளாகத்தில் துப்பாக்கி சுடுதல், கோவை கற்பகம் பல்கலையில் கட்கா, தங்-டா, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூடோ, சென்னை நேரு பூங்கா அரங்கில் யோகாசனம் ஆகிய தேர்வு போட்டி வரும், 6ம் தேதி நடக்கிறது.
2005 ஜன.,1 அன்றோ அதன் பின் பிறந்தவர், பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பள்ளி, இருப்பிடம் மற்றும் பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல் பாஸ்போர்ட் போட்டோ அவசியம். கூடுதல் விவரங்களுக்கு 88838 - 73814 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.