ADDED : மார் 08, 2024 01:36 AM
ஆண்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
நுாறு ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்கு உரிய ஊதியம், உரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கிடைத்த தீர்வுகள் தான் மகளிர் தினம் கொண்டாக அடித்தளமாக அமைந்தது. கடந்த 20, 30 ஆண்டுகள் முன்னர் வரை கூட இது குறித்த உரிய புரிதல் இல்லை.
தற்போது இது பெரும் விழாவாக நடத்தப்படுகிறது. அனைத்து இடங்களிலும், நிலைகளிலும் இன்று பெண்கள் அதிகளவில் உயரிய பணி மற்றும் பதவிகளில் உள்ளனர். மகளிர் உரிமை குறித்து முழுமையான விழிப்புணர்வு ஆண்கள் மத்தியில் இல்லாத நிலை காணப்படுகிறது.
'பெண் தானே' என ஒரு ஏளனம் சில இடங்களில் வெளிப்படுகிறது. இது களையப்பட வேண்டும். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்ட போது கூட, பலரும் வெறுமென கையெழுத்து மட்டுமே போட்டு விட்டு வரும் நிலை இருந்தது. பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு உள்ள சட்டரீதியான பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்புகள் குறித்து கூட முழு விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இல்லை. இது போன்ற விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- பூமதி
கூடுதல் அரசு வக்கீல், திருப்பூர்.
