ADDED : ஜூன் 04, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2ம்தேதி முதல் துவங்கியது.முதல் இரண்டு நாட்கள் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.
இக்கலந்தாய்வில், சிறப்புப்பிரிவுகளின்கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான, கலந்தாய்வு நடந்தது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நடக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல், கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.