/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கலைக் கல்லுாரிகளில் பொதுப்பிரிவு கவுன்சிலிங்
/
அரசு கலைக் கல்லுாரிகளில் பொதுப்பிரிவு கவுன்சிலிங்
ADDED : ஜூன் 05, 2025 01:44 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லுாரிகளில் பொதுப்பிரிவுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது.
சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலிங் கடந்த, 2ம் தேதி துவங்கிய நிலையில், நேற்று, பொதுப்பிரிவு (அறிவியல் பாடங்கள்) கவுன்சிலிங் அரசு கல்லுாரிகளில் துவங்கியது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 1,800 க்கு மேற்பட்டோர் கவுன்சிலிங் அழைக்கப்பட்டிருந்தனர்; 250 பேர் பங்கேற்றதில், 194 பேர் நேற்று பட்டப்படிப்பை தேர்வு செய்து, கல்லுாரியில் இணைந்தனர்.
பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், பொதுப்பிரிவு கவுன்சிலிங்க்கு, 1,500 மாணவியர் அழைக்கப்பட்டிருந்தனர்; 280 பேர் பங்கேற்றதில், 200 பேர் பாடப்பிரிவு தேர்வு செய்து, கல்லுாரியில் இணைந்தனர். தாராபுரம், பல்லடம், அவிநாசி அரசு கலைக்கல்லுாரிகளிலும் நேற்று பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்தது. பல்வேறு பாடங்களுக்கு பொது கவுன்சிலிங், வரும், 10ம் தேதி வரை நடக்கவுள்ளது.