/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வு விடைத்தாள் 'டாப் சீட்' இணைக்கும் பணிகள் துவக்கம்
/
பொதுத்தேர்வு விடைத்தாள் 'டாப் சீட்' இணைக்கும் பணிகள் துவக்கம்
பொதுத்தேர்வு விடைத்தாள் 'டாப் சீட்' இணைக்கும் பணிகள் துவக்கம்
பொதுத்தேர்வு விடைத்தாள் 'டாப் சீட்' இணைக்கும் பணிகள் துவக்கம்
ADDED : பிப் 16, 2024 12:56 AM
உடுமலை:பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாளுடன், 'டாப் சீட்' இணைக்கும் பணிகள் உடுமலை அரசுப்பள்ளிகளில் துவங்கியது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், விடைத்தாளின் முதல் பக்கத்தில், மாணவர்களின் பெயர், பதிவு எண், தேர்வு தேதி, புகைப்படம், தேர்வு பாடம், தேர்வு மையம் என அனைத்து விபரங்களும் அச்சிடப்பட்ட 'டாப்சீட்டை' விடைத்தாளுடன் இணைக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதியும் துவங்குகின்றன.
குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே, டாப்சீட்டை விடைத்தாளுடன் இணைப்பதற்கான பணிகள் நடக்கிறது. உடுமலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் இப்பணிகள் துவங்கியுள்ளன.
பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வித்துறையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
மொழிப்பாடங்களுக்கான 'டாப்சீட்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளதால், அப்பாடங்களுக்கான விடைத்தாள்களுடன் டாப்சீட்கள் தைக்கும் பணிகள் நடக்கிறது.