ADDED : ஏப் 10, 2025 11:52 PM
திருப்பூர்; அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டம், திருப்பூர் - பி.என்., ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.,) பொதுச்செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டி.யு., சம்பத், நாகராஜன், எல்.பி.எப்., பாலசுப்பிரமணியம், பூபதி, ஐ.என்.டி.யு.சி., சிவசாமி, பெருமாள், எச்.எம்.எஸ்., முத்துசாமி, எம்.எல்.எப்., சம்பத் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு, 44 தொழிலாளர் நல சட்டங்களை, நான்கு தொகுப்புகளாக திருத்தம் செய்துள்ளதை திரும்பப்பெறவேண்டும்.
அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அறிவியல் முறைப்படி கணக்கிட்டு தீர்மானிக்கவேண்டும்; மத்திய நிதி அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ள 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மே 20ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடுமுழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இதில், திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும். மே தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.