/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொது தொழிலாளர் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
பொது தொழிலாளர் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
பொது தொழிலாளர் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
பொது தொழிலாளர் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூலை 28, 2025 09:14 PM

உடுமலை; அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்க மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.,) எட்டாவது மகாசபை கூட்டம் நேற்று உடுமலையில் நடந்தது.
சங்கத்தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். பாபு வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் விஸ்வநாதன் மாநாட்டை துவக்கி வைத்தார். கோரிக்கைகள் குறித்து செயலாளர் ஜெகதீசன் பேசினார்.
கூட்டத்தில், புதிய தொழிலாளர் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்; அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில், கல்வி, திருமணம், விபத்து மற்றும் இயற்கை மரணம் உட்பட அனைத்து உதவி தொகைகளையும் இரண்டு மடங்கு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் சம்பத் பேசினார்.