தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு: பா.ஜ. வேட்பாளர் உறுதி:

சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு: பா.ஜ. வேட்பாளர் உறுதி:

சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு: பா.ஜ. வேட்பாளர் உறுதி:


ADDED : ஏப் 13, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: ''சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தருவேன்'' என்று அவிநாசி பா.ஜ. வேட்பாளர் முருகன் உறுதியளித்தார்.

அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகன், சேவூர் ரவுண்டானா மற்றும் சேவூர் வாரச்சந்தை பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

முருகன் பேசியதாவது:

தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபித்து, அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் இந்தத் தொகுதியில் தாமரை மலரச் செய்து, அந்த வெற்றியைப் பழனிசாமிக்குக் காணிக்கையாக்குவோம்.

சேவூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் ஸ்டாண்ட், மின் மயானம் மற்றும் சந்தை மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சேவூர் நிலக்கடலைக்கு 'புவிசார் குறியீடு' பெற்றுத் தரப் பிரதமர் மோடியின் ஆதரவுடன் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

சந்தைப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தபோது, தள்ளுவண்டி கடையில் கிழங்கு போண்டாவை ருசி பார்த்த முருகன், அதன் மூலப்பொருட்களின் விலை உயர்வு குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார்.

காய்கறி மார்க்கெட்டிலும் விலைவாசி உயர்வு குறித்து மக்களிடம் உரையாடி அவர் ஆதரவு திரட்டினார்.

சேவூர் ஒன்றிய செயலாளர் வேலுசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர்ரவிகுமார், அன்னுார் அம்பாள் பழனிசாமி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் பா.ஜ. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us