/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லஞ்சம் வாங்கி குடிநீர் இணைப்பு?
/
லஞ்சம் வாங்கி குடிநீர் இணைப்பு?
ADDED : ஆக 04, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய் பகுதியில் சிலர் ஊராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்று உள்ளதாகவும், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆறுமுகம் என்பவர் கூறுகையில், ''உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன். முறைகேடான குடிநீர் இணைப்புகளால் ஊராட்சிக்கு மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர். எனவே, உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.