/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாராக்கடன் நபர்கள் 'கருப்பு பட்டியல்' தயாராகிறது! ஆடை உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு
/
வாராக்கடன் நபர்கள் 'கருப்பு பட்டியல்' தயாராகிறது! ஆடை உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு
வாராக்கடன் நபர்கள் 'கருப்பு பட்டியல்' தயாராகிறது! ஆடை உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு
வாராக்கடன் நபர்கள் 'கருப்பு பட்டியல்' தயாராகிறது! ஆடை உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு
ADDED : டிச 07, 2025 05:25 AM

திருப்பூர்: பின்னலாடை வர்த்தகத்தில், வாராக்கடனால் உறுப்பினர்களை பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், சட்ட வல்லுனர்கள் ஆலோசனையுடன், கருப்புப்பட்டியல் தயாரிக்க தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்கம் திட்டமிட்டுள்ளன.
திருப்பூரில் 'சைமா' நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலச்சந்தர், பொதுச்செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
பின்னலாடை உற்பத்தி, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயக்கம், திருப்பூர் பின்னலாடை வர்த்தகம், வெளிமாநில ஆர்டர்கள் என, ஒட்டுமொத்த பின்னலாடை தொழில் நிலவரம், தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
45 நாளுக்கு மேல்கடன் கூடாது மத்திய அரசின் சட்டப்படி, ஆடை உற்பத்தியாளர்கள், மூலப்பொருள் வினியோகத்துக்கு, 45 நாட்களுக்குள் தொகை கொடுக்கின்றனர். இருப்பினும், ஆடை வினியோகஸ்தர்கள், மொத்த வியாபாரிகள், ஏஜன்ட்களிடம் இருந்து, அதேபோல், 45 நாட்களுக்குள் பணம் கிடைப்பதில்லை. இனிவரும் நாட்களில், அனைத்து வினியோகஸ்தர் மற்றும் வியாபாரிகளுக்கு, 45 நாட்களுக்கு மேல் கடன் அனுமதிக்க இயலாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மோசடி புகார்அதிகரிப்பு குறு, சிறு பனியன் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னையாக மாறியிருப்பது வாராக்கடன். நம்பிக்கை அடிப்படையில், ஆடையை வடிவமைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்; சம்பந்தப்பட்ட வர்த்தகர், ஆடைகளை பெற்றுக்கொண்டு, அதற்கான விலையை கொடுக்காமல் ஏமாற்றுவதும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில், சமீபத்தில் அதிக புகார்கள் பதிவாகியுள்ளன.
அறிமுகமான நிலையில் இருந்து, குறைந்த அளவு வர்த்தகம் செய்யும் வியாபாரிகள், முதலில் நம்பிக்கையானவர் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர். அதற்கு பிறகு, சிறிய முன்தொகை வழங்கி ஆர்டர்களை பெறுகின்றனர்; பிறகு, ஆடைகளுக்கான விலையை கொடுக்கின்றனர். நாளடைவில்லை, அதிக எண்ணிக்கையான ஆடைகளை ஆர்டர் கொடுத்து பெற்றுக்கொண்டு, தப்பிவிடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், இதுதொடர்பான பேச்சுவார்த்தையும், போலீசில் புகார் அளிப்பதும் நடந்து வருகிறது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆடை உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்து, வாராக்கடனால் பாதிக்கும் உறுப்பினர்கள் நலன் கருதி, கருப்பு பட்டியல் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

