/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெய் தரம் பிரிக்கும் ஆலை ஊத்துக்குளியில் அமைகிறது
/
நெய் தரம் பிரிக்கும் ஆலை ஊத்துக்குளியில் அமைகிறது
நெய் தரம் பிரிக்கும் ஆலை ஊத்துக்குளியில் அமைகிறது
நெய் தரம் பிரிக்கும் ஆலை ஊத்துக்குளியில் அமைகிறது
ADDED : பிப் 03, 2026 06:13 AM

திருப்பூர்: 'என் ஊர்; என் கனவு' திட்டத்தில் இலக்கு - 2030 தயாரிப்பதற்கான கலந்தாய்வு கூட்டம், ஊத்துக்குளி தாலுகா, செங்கப்பள்ளியில் உள்ள சொர்ண மஹாலில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
தமிழகத்திலுள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை அறியும்வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற 50 ஆயிரம் தன்னார்வலர்கள், வீடு வீடாக சென்று, 10 வகை அரசு திட்டங்கள் அடங்கிய படிவங்களை வழங்கி, எந்தெந்த திட்டங்களில் குடும்பம் பயன்பெற்றுள்ளது என்ற விவரங்கள் பெறப்பட்டுவருகிறது.
உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்தபடி, வெண்ணெயிலிருந்து பல்வேறு மூலப்பொருட்கள் தயாரிப்பதற்கும், நெய் தரம் பிரித்தெடுக்கும் ஆவின் தொழிற்சாலை, ஊத்துக்குளியில் துவங்கப்படும். நில அனுமதி கிடைத்த உடன், அதற்கான பணிகள் துவங்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் ஆர்.டி.ஓ. சிவபிரகாஷ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கனவு அட்டைகள் மக்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்படும் படிவங்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவ எண்ணுடன் கூடிய கனவு அட்டைகள் வழங்கப்படும். - அமைச்சர் சாமிநாதன்.

