/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 25, 2025 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பேரணியில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலம் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி உள்ள வீதிகளின் வழியாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முகமது அஸ்லாம் மற்றும் ஆசிரியர்கள் செந்தில், கவுசல்யா, வளர்மதி, பிரேமா செய்திருந்தனர்.