/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எறிபந்தில் 'தெறி'க்க விட்ட மாணவியர்; குறுமைய போட்டிகளில் அனல் பறக்குது
/
எறிபந்தில் 'தெறி'க்க விட்ட மாணவியர்; குறுமைய போட்டிகளில் அனல் பறக்குது
எறிபந்தில் 'தெறி'க்க விட்ட மாணவியர்; குறுமைய போட்டிகளில் அனல் பறக்குது
எறிபந்தில் 'தெறி'க்க விட்ட மாணவியர்; குறுமைய போட்டிகளில் அனல் பறக்குது
ADDED : ஜூலை 18, 2025 11:43 PM

திருப்பூர்; வடக்கு குறுமைய போட்டியில் மாணவ, மாணவியர் திறமையில் வியக்க வைத்தனர்.
திருப்பூர் வடக்கு குறுமைய மாணவிகளுக்கான கபடி மற்றும் எறிபந்து (த்ரோபால்) போட்டிகள், திருமுருகன்மெட்ரிக் பள்ளியில் நடந்தது. எறிபந்து போட்டி மாணவியர், 14 வயது பிரிவில், ஸ்ரீசாய் பள்ளி முதலிடம்; கொங்கு மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 17 வயது பிரிவில் கொங்கு மெட்ரிக் பள்ளி முதலிடம்; ஸ்ரீசாய் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் அரசு மாநகராட்சி பள்ளி முதலிடம், ஜெய் சாரதா பள்ளி இரண்டாமிடம் பெற்றனர்
கபடி போட்டியில், 14 மற்றும், 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி முதலிடம், வி.கே., அரசு பள்ளி இரண்டாமிடம் பெற்றனர். 17 வயது பிரிவில், வி.கே., அரசு பள்ளி முதலிடம், அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி இரண்டாமிடம் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் சுதா, பரிசு வழங்கினார். குறுமைய விளையாட்டு இணை செயலர் இளங்கோவன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
கால்பந்து போட்டி
திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கால்பந்து மற்றும் பால் பேட்மிட்டன் போட்டியில் மாணவர்கள் அசத்தினர். முதலிபாளையம் நிப்ட்- டீ கல்லுாரி மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியை கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 17 வயது மாணவர் பிரிவில், மொத்தம், 12 பள்ளி அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில், கிட்ஸ் கிளப் பள்ளி அணி 1 -0 என்ற கோல் கணக்கில் லிட்டில் பிளவர் பள்ளி அணியை வென்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில், சென்சுரியன் பள்ளி அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில், பாலபவன் குளோபல் பள்ளி அணியை வென்றது.தெற்கு குறுமைய பால் பேட்மிட்டன் போட்டியில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவில், மொத்தம், 15 அணிகள் பங்கேற்றன.
மூன்று பிரிவு போட்டியிலும், வித்ய விகாசினி பள்ளி அணி முதலிடம். 14 மற்றும், 17 வயது பிரிவில், கருப்பக்கவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, இரண்டாமிடம். 19 வயது பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம்.