/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமி கர்ப்பம் தந்தை, காதலன் கைது
/
சிறுமி கர்ப்பம் தந்தை, காதலன் கைது
ADDED : நவ 06, 2025 01:48 AM
திருப்பூர்: திருப்பூரில், 17 வயது சிறுமியை கர்ப்ப மாக்கிய தந்தை, காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .
திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமிக்கு, திருப்பூரில் தங்கி பனியன் பிரின்டிங் வேலை செய்து வரும் சேலத்தை சேர்ந்த இளவரசன், 22, என்பவர் பழக்கமானார். நான்கு ஆண்டுகளாக, இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.
இதில், சிறுமி, மூன்று மாதம் கர்ப்பமானார். புகாரின்படி, கே.வி.ஆர்., நகர் மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில், காதலன் திருமணம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது.
மேலும், சிறுமியின், 47 வயதான தந்தை மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிந்தது. தந்தை, காதலன் ஆகியோரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

