/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கோடையில் கால்நடைகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுங்க!'
/
'கோடையில் கால்நடைகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுங்க!'
'கோடையில் கால்நடைகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுங்க!'
'கோடையில் கால்நடைகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுங்க!'
ADDED : மே 16, 2025 12:35 AM
திருப்பூர், ; 'வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கால்நடைகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க வேண்டும்; வெயில் நேர மேய்ச்சலை தவிர்க்க வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த மாதாந்திர பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். வெள்ளாடு இனங்கள் தேர்வு செய்வது, பராமரித்து வளர்ப்பது, நோய் தாக்கத்தில் இருந்து காப்பது, வளர்ந்த பின் வர்த்தக முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கால்நடை மருத்துவ பல்கலை உதவி பேராசிரியர் தேவிபிரியா பேசுகையில், 'தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் முடியும் முன் வெயில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதிகாலை நேரத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
காலை 10:00 மணி முதல் உச்சி வெயில் நேரங்களில் நிழல்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், குறைந்தளவு தீவனம் எடுக்கும்; கால்நடைகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். பட்டிகளில் நிழல் கிடைக்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்,' என்றார்.