ADDED : அக் 13, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) கவுரி அறிக்கை:
ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்ப நல கருத்தடை (வாசக்டமி) சிகிச்சை முகாம் வரும், 16ம் தேதி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடக்கிறது. பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைகளை காட்டிலும், எளிதான ஆண்களுக்கான நவீன கருத்தடை முறையை ஏற்று, மனைவியின் சுமையை குறைக்கலாம். வாசக்டமி சிகிச்சை முறையை ஏற்கும் தகுதி வாய்ந்த ஆண்களை வரவேற்கிறோம். அரசின் ஊக்கத்கொகையாக, 3,100 ரூபாய் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 99422 59775, 80728 65541.