/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவண் மூலம் கண்ணாடி உடைப்பு: காரில் இருந்த பணம் திருட்டு
/
கவண் மூலம் கண்ணாடி உடைப்பு: காரில் இருந்த பணம் திருட்டு
கவண் மூலம் கண்ணாடி உடைப்பு: காரில் இருந்த பணம் திருட்டு
கவண் மூலம் கண்ணாடி உடைப்பு: காரில் இருந்த பணம் திருட்டு
ADDED : ஜன 15, 2024 01:33 AM
திருப்பூர்:அவிநாசியில் ரோட்டோரம் நிறுத்தியிருந்த எல்.ஐ.சி., முகவரின் கார் கண்ணாடியை உடைத்து, 35 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடி சென்றார்.
அவிநாசி, ராயம்பாளையத்தை பரமசிவம், 53; எல்.ஐ.சி., முகவர். நேற்று முன்தினம் இரவு, அவிநாசியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு காரில் சென்றார்.
காரை, அங்கிருந்த 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தினார். கோவிலில் வழிபட்டுவிட்டு திரும்பியபோது, காரின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் வைத்திருந்த, 35 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது.
புகாரின் பேரில், அவிநாசி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்ட போது, தொப்பி அணிந்த நபர், கவண் (ஒண்டிவில்) மூலம் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த பணத்தை திருடி செல்வது தெரிந்தது.
அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.