ADDED : பிப் 15, 2024 12:02 AM
திருப்பூர் மாவட்ட அளவில், தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மிக இளையோருக்கான மாணவியர் கபடி போட்டியில், சர்க்கார் பெரியாயிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள், முதலிடம் பெற்றனர். வரும், 15ம் தேதி (நாளை) துவங்கி, 17ம் தேதி வரை, புதுக்கோட்டையில் நடக்கவுள்ள மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். அணியில் இடம் பிடித்துள்ள லக்ஷயா (கேப்டன்), காவ்யாஸ்ரீ, அரிஷா, நிவேதிகா, வக்ஷனா, ரேகர்ஷா, பிரீத்தி, ஜெய்ஸ்ரீ, கவிப்பிரியா, வசுமதி, திவ்ய தர்ஷினி ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில், போக்குவரத்து செலவு மற்றும் விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. அதன் செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், அவற்றை வழங்கி, பாராட்டி, வழியனுப்பி வைத்தார்.
பள்ளி தலைமையாசிரியை கமலா ஜூலி, ராமசாமி, ராஜ்குமார், மாவட்ட நடுவர் குழு தலைவர் முத்துசாமி பங்கேற்றனர். அணி பயிற்சியாளராக உடற்கல்வி ஆசிரியை தமிழ்வாணி செல்கிறார்.

