
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது.
பக்தர்கள் கங்கணம் அணிந்து விரதம் துவங்கினர். இன்று காலை, 7:40 மணிக்கு, 16 நாட்டு பசுக்களை கொண்டு கோ பூஜை நடத்தப்பட்டது.
இதை நாமக்கல் கபிலர்மலை செல்வ கபில சிவாச்சாரியார், திருச்சி நாகராஜ குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து வாவிபாளையம் அனந்த கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் யாக பூஜை, பூர்வாங்க பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு ஸ்ரீ கந்தர் அனுபூதி பாராயணம், மகாதீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஆதன் பொன் செந்தில்குமார் தலைமையில் கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், காராளன் கம்பத்தாட்டம் நடந்தது.
வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம், 8ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.