/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவா மது கடத்தல்; மேலும் 2 பேர் கைது
/
கோவா மது கடத்தல்; மேலும் 2 பேர் கைது
ADDED : மார் 17, 2025 01:48 AM
திருப்பூர்; கோவாவில் இருந்து கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக கோவை சி.ஐ.யு., பிரிவு போலீசார், திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவிநாசி - பல்லடம் ரோட்டில் சேடபாளையம் பிரிவில் கடந்த 7ம் தேதி வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
சந்தேகப்படும் விதமாக, பைபர் கிளாஸ் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனர். அதில் கிளாஸ் ஏற்றப்பட்டு வந்த தார்பாயின் மீது, வேறொரு தார்ப்பையை போர்த்தி கோவா மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, ராமு, 48, மாரிமுத்து, 41, சுதர்சன், 24, வேலவன், 27 என, நான்கு பேரை கைது செய்தனர். 2,340 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில் கடத்தி வரப்பட்டது தொடர்பாக, பின்னணியில் உள்ள திண்டுக்கல் மற்றும் பெங்களூருவை சேர்ந்த சிலரை பிடிக்க, இரு தனிப்படையினர், திண்டுக்கல் மற்றும் பெங்களூருவில் கண்காணித்து வந்தனர்.
அதில், சசிகுமார், 46, சுதர்சனின் தந்தை முத்துக்குமார் ராஜன், 58 என, இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.