sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோபாஷ்டமி கோலாகலம் 462 இடங்களில் கோ பூஜை

/

கோபாஷ்டமி கோலாகலம் 462 இடங்களில் கோ பூஜை

கோபாஷ்டமி கோலாகலம் 462 இடங்களில் கோ பூஜை

கோபாஷ்டமி கோலாகலம் 462 இடங்களில் கோ பூஜை


ADDED : நவ 10, 2024 04:33 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட, 462 இடங்களில் கோ-பூஜை சிறப்பாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

நேற்று அஷ்டமி திதியில் கோபாஷ்டமி விழாவை கொண்டாடும் வகையில், கோ சேவா சமிதியினர் திருப்பூர் மாநகரம் உட்பட, 462 இடங்களில் பாரம்பரியமான நாட்டு இன பசுக்களை வைத்து கோ பூஜை விழாவை சிறப்பாக நடத்தினர். ஏராளமான பொதுமக்கள் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் கூறியதாவது:

பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வின் வளர்ப்பு தந்தை ஸ்ரீ நந்தர், பிருந்தாவனத்தில் பசுக்களின் கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை குழந்தை கிருஷ்ணர் வசம் ஒப்படைத்திருந்தார். அப்போது, கிருஷ்ணருக்கு, ஐந்து வயது பூர்த்தியாகும் போது, பிருந்தாவனத்தில் இருந்து நந்தவனத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு தனது சகோதரர் பலராமனுடன் பசுக்களை முதன் முதலில் மேய்ச்சலுக்கு அனுப்பும் நிகழ்வை, ஒரு விழாவாக கொண்டாடினர். அந்த நாளே, கோபாஷ்டமி. இதை வடமாநில முழுவதும் கொண்டாடப்படும் விழாவானது, கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளை கொண்டாட திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. வீடு, தோட்டம், கோவில் என, 462 இடங்களில் நாட்டு பசுக்களை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பெருமாநல்லுாரில், 102, செஞ்சேரி, 92, பல்லடம், 74, அவிநாசி, 60, பொங்கலுார், 43, ஊத்துக்குளி, 41, திருப்பூர் மாநகர், 35 மற்றும் பல்லடம் நகரம், 15 என, 462 இடங்களில் நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us