/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகளத்தில் தங்கப்பதக்கம்; பாராட்டு மழையில் மாணவி
/
தடகளத்தில் தங்கப்பதக்கம்; பாராட்டு மழையில் மாணவி
ADDED : ஜன 22, 2025 12:19 AM

திருப்பூர்; திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் வர்ஷிகா என்ற மாணவி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த எஸ். ஜி.எப்.ஐ., தடகளப் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், 80 மீ., தடை தாண்டும் போட்டியில், முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் பெற்றார். அவர் 12.20 விநாடியில் பந்தய துாரத்தை கடந்தார்.
திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு பாராட்டு நடந்தது. பள்ளி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், கோப்பை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேஸ்வரி, மோகனசுந்தரி, தடகள பயிற்சியாளர் சுரேஷ் ராஜ் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, மேயர் தினேஷ்குமார், மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.