/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கையுந்து போட்டியில் தங்கம் மாணவிக்கு குவியும் பாராட்டு
/
கையுந்து போட்டியில் தங்கம் மாணவிக்கு குவியும் பாராட்டு
கையுந்து போட்டியில் தங்கம் மாணவிக்கு குவியும் பாராட்டு
கையுந்து போட்டியில் தங்கம் மாணவிக்கு குவியும் பாராட்டு
ADDED : மே 18, 2025 12:41 AM

திருப்பூர் : கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி களில் கையுந்து போட்டி யில் பங்கேற்க தமிழக அணிக்கு சென்னையில் தேர்வு நடைபெற்றது. இதில் 18 வயது பெண்கள் கையுந்து போட்டியில் பங்கேற்க, நம்பியூர், குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீ உட்பட 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சமீபத்தில், பாட்னாவில் நடைபெற்ற போட்டியில், தமிழக அணி, அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வென்று, இறுதி போட்டிக்கு தேர்வானது. இறுதி போட்டியில் மேற்கு வங்க அணியை தமிழக அணி வெற்றி கொண்டது. இப்போட்டியில் தமிழக அணிக்கு லிப்ரோ பொசிஷனில் விளையாடிய யோகி ஸ்ரீ தங்கம் வென்றார்.
தேசிய அளவில் இந்த சாதனையை படைத்த அவரை ஈரோடு எஸ்.பி., சுஜாதா பாராட்டி பரிசளித்தார். பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரும் வாழ்த்தினர்.