ADDED : பிப் 03, 2024 01:05 AM

அ நிறம் | அளவு
சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் 'கேலோ இந்தியா' போட்டி ஜன., 19ல் துவங்கி 31 வரை நடந்தது.
இப்போட்டியில் நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பவீனா, விஷ்ணுஸ்ரீ, பூங்குழலி, முமஞ்சா, பிரியதர்ஷினி ஆகிய ஐந்து பேர் பங்கேற்றனர். இவர்களில் பவீனா மும்முறை தாண்டுதலில் முதலிடம் பெற்று, தமிழகத்துக்கு தங்கம் வென்று தந்தார். 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற, விஷ்ணு ஸ்ரீ முதலிடம் பெற்று, தங்கம் வென்று பாராட்டு பெற்றார். உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில் படித்து வரும் பூங்குழலி, முமஞ்சா, பிரியதர்ஷினி ஆகியோர் தமிழக ஹாக்கி அணி போட்டியில் பங்கேற்றனர். வீரர், வீராங்கனைகள் திருப்பூர் திரும்பினர்.
