sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூவி கூவி காலிபிளவர் விற்பனை

/

கூவி கூவி காலிபிளவர் விற்பனை

கூவி கூவி காலிபிளவர் விற்பனை

கூவி கூவி காலிபிளவர் விற்பனை


ADDED : மார் 17, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வரத்து அதிகரிப்பால், காலிபிளவர் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் பெரிய காலிபிளவர் பூ, 15 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கப்பட்டது.

தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு கடந்த ஒரு வாரமாக காலிபிளவர் வரத்து அதிகமாக உள்ளது. மூட்டை மூட்டையாக, 500 - 600 கிலோ வரை காலிபிளவர் வந்து குவிவதால், விலை குறைந்துள்ளது.

வழக்கமாக பெரிய பூ, 35 - 50 ரூபாய், சிறிய பூ, 20 - 30 ரூபாய் என விற்கப்படும். வரத்து அதிகரிப்பால், பெரியது, 20 - 30 ரூபாய், சிறியது, 15 - 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை குறைவால் வீடுகளுக்கு ஒரு காலி பிளவர் வாங்குவோர் கூட கூடுதலாக ஒரு பூ சேர்த்து வாங்கிச் செல்கின்றனர்.

அதே விலை; அளவு அதிகம்


ரோட்டோர தள்ளுவண்டி, ஓட்டல், டீ, பேக்கரி கடைகளில் காலிபிளவர் சில்லி ஒரு பிளேட், 30 முதல், 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, பெரிய காலிபிளவர் பூவே, 25 ரூபாய்க்கு விற்கும் நிலையில், காலிபிளவர் சில்லி விலை குறையவில்லை; பழைய விலையே தொடர்கிறது. அதே நேரம், வாடிக்கையாளர்களுக்கு காலிபிளவர் சில்லி பிளேட்டில் வழங்கும் அளவை அதிகப்படுத்தியிருப்பதாக, சில்லி வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் ஏமாற்றம்


விவசாயிகள் கூறியதாவது:

ஒரு ஏக்கரில் காலிபிளவர் பயிரிட, 70 - 80 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடந்த, மார்கழி மாதம் காலிபிளவர் விலை உயர்ந்திருந்தது; விலையை எதிர்பார்த்து பயிரிட்டோம். தற்போது, விலை இல்லை. லாபம் எதிர்பார்க்க முடியாது. தோட்டத்தில் அப்படியே விட்டால், வேறு விவசாயம் செய்ய முடியாது. கிடைத்த விலை கிடைக்கட்டும் என விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.

இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

விவசாயிகள் ஏமாற்றம்

விவசாயிகள் கூறியதாவது:ஒரு ஏக்கரில் காலிபிளவர் பயிரிட, 70 - 80 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடந்த, மார்கழி மாதம் காலிபிளவர் விலை உயர்ந்திருந்தது; விலையை எதிர்பார்த்து பயிரிட்டோம். தற்போது, விலை இல்லை. லாபம் எதிர்பார்க்க முடியாது. தோட்டத்தில் அப்படியே விட்டால், வேறு விவசாயம் செய்ய முடியாது. கிடைத்த விலை கிடைக்கட்டும் என விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.








      Dinamalar
      Follow us