/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்ல விலை; அரசாணி; விவசாயிகள் மகிழ்ச்சி
/
நல்ல விலை; அரசாணி; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 14, 2025 11:55 PM
பொங்கலுார்; வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த அரசாணி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.
எனவே, பெரும்பாலான விவசாயிகள் தென்னையைக் காப்பாற்றவே போராடி வந்தனர். மீதமுள்ள தண்ணீரை நம்பியே காய்கறி விவசாயம் நடக்கிறது. வைகாசி பட்டத்தில் அரசாணி சாகுபடி பரப்பு குறைந்தது. தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்த அரசாணி செடிகளும் கருகியது. இதனால் அரசாணி வரத்து குறைந்துள்ளது.
தேவையை விட விளைச்சல் குறைந்ததால் அரசாணி நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ சராசரியாக, 25 ரூபாய்க்கு விலை போகிறது. விவசாயிகளிடம் குறைந்தபட்சம், 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில நேரங்களில் கிலோ இரண்டு ரூபாய்க்கு கூட விலை போகாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
இந்த சீசனில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.