/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செடி முருங்கையில் நல்ல மகசூல்; பயிர் பாதுகாப்பு அவசியம்
/
செடி முருங்கையில் நல்ல மகசூல்; பயிர் பாதுகாப்பு அவசியம்
செடி முருங்கையில் நல்ல மகசூல்; பயிர் பாதுகாப்பு அவசியம்
செடி முருங்கையில் நல்ல மகசூல்; பயிர் பாதுகாப்பு அவசியம்
ADDED : பிப் 17, 2025 10:56 PM
உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக செடி முருங்கை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இச்சாகுபடியில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழ ஈக்களின் குஞ்சுகள், காயை தின்று சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
பென்தியான் ஈ; டைக்குளோர்வாஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி என்ற விகிதத்தில், கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிக்கும் முன் காய்களை பறித்து விட வேண்டும்.
தெளித்த பிறகு, 10 நாட்களுக்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது. துார் அழுகல் நோயானது பிஞ்சு காய்களின் தோல் பகுதியில் உண்டாகும் காயங்கள் வாயிலாக பூசணம் நுழைந்து அழுகலை உண்டாக்குகிறது.
பழுப்பு நிற புள்ளிகள் காய்களின் வெளிப்புறத்தில் தோன்றும். நோயை கட்டுப்படுத்த பிஞ்சு பருவத்தில், கார்பன்டாசிம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு, கோவை வேளாண் பல்கலை., சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், ஓராண்டுக்கு ஒரு மரத்தில் இருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம். ஒரு ெஹக்டேருக்கு 50-55 டன் வரை காய்கள் கிடைக்கும்.

