UPDATED : அக் 11, 2026 06:51 PM
ADDED : அக் 11, 2026 06:06 PM
திருப்பூர்: ஆறு மணி நேர வேலை முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் கூட்ஸ் செட் சுமைப்பணித் தொழிலாளர்கள் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
24 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்து, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பழைய வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும்; தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்; இ.எஸ்.ஐ., பி.எப். திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், குடிநீர், ஓய்வறை, குளியலறை, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்ஸ் செட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கோபிகுமார், சங்கச் செயலாளர் பாலன், பொருளாளர் ஜெயபால் பேசினர். நிர்வாகிகள் கார்த்தி, அய்யாரப்பன், துணைத் தலைவர் ஈஸ்வரன், துணைச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட கூட்ஸ்செட் சுமைப்பணித் தொழிலாளர்கள்.
