/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதியம், இரவு நேரங்களில் அரசு பஸ்கள்... திடீர் ரத்து! 800 டிரைவர், நடத்துனர் பணியிடம் காலி
/
மதியம், இரவு நேரங்களில் அரசு பஸ்கள்... திடீர் ரத்து! 800 டிரைவர், நடத்துனர் பணியிடம் காலி
மதியம், இரவு நேரங்களில் அரசு பஸ்கள்... திடீர் ரத்து! 800 டிரைவர், நடத்துனர் பணியிடம் காலி
மதியம், இரவு நேரங்களில் அரசு பஸ்கள்... திடீர் ரத்து! 800 டிரைவர், நடத்துனர் பணியிடம் காலி
ADDED : டிச 12, 2025 06:13 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு சத்தமில்லாமல் அரசு பஸ் இயக்கம் மதியம், இரவு நேரங்களில் குறைக்கப்படுகின்றன. மாவட்டம் முழுக்க 800க்கும் மேற்பட்ட டிரைவர், நடத்துனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தின் கீழ், திருப்பூர் மண்டலம் உள்ளது. திருப்பூர் 1, 2, காங்கயம், தாராபுரம், பழநி 1, 2, பல்லடம், உடுமலை ஆகிய எட்டு பணிமனைகளில் இருந்து தினசரி, 525 பஸ்களும், வார விடுமுறை நாட்களில், 595 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
திருப்பூரில் உள்ள எட்டு பணிமனைகளில் போக்குவரத்து கழக கணக்கிட்டின் படியே, 350 - 450 டிரைவர், நடத்துனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்காலிகமாக தேர்வு செய்யப்படுவது ஒருபுறம் இருந்தாலும், ஓய்வு பெறுவோர், தொடர் மருத்துவ விடுப்பில் இருப்போர் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கும் போது, 70 சதவீத வழித்தடங்களுக்கு மட்டுமே டிரைவர், நடத்துனர்
அவருக்கு மாற்று பணியாளர் உள்ளனர்; 30 சதவீத வழித்தடங்களில் நிலைமையை அதிகாரிகள் சமாளிக்கின்றனர். இதனால், புறநகர் மற்றும் கிராமங்களுக்கு மதிய, இரவு நேரங்களில் முழுமையாக பஸ்கள் இயங்காமல், ஓரிரு டிரிப்கள் சத்தமின்றி ரத்து செய்யப்பட்டு விடுகிறது.அரசு போக்குவரத்து கழக, தொழிற்சங்க திருப்பூர் மண்டல செயலாளர் (சி.ஐ.டி.யு.) செல்லத்துரை கூறுகையில், ''மாவட்டம் முழுதும், 3,800 டிரைவர், நடத்துனர் வேண்டும். 2,700 க்கும் குறைவான பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. 800 க்கும் மேற்பட்ட டிரைவர், நடத்துனர்
பணியிடம் காலியாக இருக்கும். 2015க்கு பின் நேரடி நியமனம் இல்லாததால், இருக்கும் பணியாளர்களை வைத்து சமாளிக்கின்றனர். பழநி, திருப்பூர் டிப்போவில் மூன்றில் ஒரு பகுதி டிரைவர் மட்டுமே உள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்படுபவர்கள், கூடுதல் நேரம் பணியாற்றும் போது அவர்களுக்கு பணி மாற்றம் செய்ய டிரைவர், நடத்துர் ஆளில்லை,' என்றார்.
பயணிகள் புகார் தெரிவிக்கலாம் போக்குவரத்து கழக விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்காலிக டிரைவர், நடத்துனர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து நிரப்பப்படுகிறது. காலியாக உள்ள இடங்களுக்கு மாற்று பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். பஸ்கள் இயக்கம் சீராக இருக்க தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் இயங்காத வழித்தடம் இருந்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம். அப்பகுதிக்கும் பஸ் இயக்கப்படும். - சுப்ரமணியம், திருப்பூர் மண்டல பொது மேலாளர், அரசுப் போக்குவரத்து கழகம்.

