புதிய இணைப்பு வழங்குவதில் சிக்கல்: அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தவிப்பு
புதிய இணைப்பு வழங்குவதில் சிக்கல்: அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தவிப்பு
UPDATED : ஆக 20, 2026 09:55 PM
ADDED : ஆக 20, 2026 09:54 PM
திருப்பூர்:அரசு கேபிள் டிவியில் புதிய செட்டாப் பாக்ஸ்களை ஆக்டிவேஷன் செய்வதிலும்(செயல்படுத்துதல்), துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கான பாக்ஸ்களை டி-ஆக்டிவேஷன் செய்வதிலும்(செயலிழக்கச் செய்தல்) சிக்கல் ஏற்பட்டுள்ளதால், புதிய இணைப்பு வழங்க முடியாமல் திருப்பூர் பகுதி ஆபரேட்டர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் எச்.டி., செட்டாப் பாக்ஸ்களும், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சேனல் பேக்கேஜ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசு கேபிள் இணைப்பு பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக புதிய பாக்ஸ்களை ஆக்டிவேஷன் செய்ய முடியாததுடன், துண்டிக்கப்பட்ட இணைப்புகளையும் டி-ஆக்டிவேஷன் செய்ய முடியவில்லை. சர்வர் கோளாறு காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.
ஆபரேட்டர்கள் கூறுகையில், ''புதிய இணைப்பு கேட்டு வருபவர்களுக்கு சேவை வழங்க முடியவில்லை. குறைந்த கட்டணத்தில் தடையின்றி சேனல்களை வழங்கும் வகையில், அரசு கேபிள் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்'' என்றனர்.
