தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 03, 2024 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்;வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனச்சரகம், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - -2 மாணவர்கள், சார்பில், உலக வனவிலங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா ரவுண்டானாவில் நடந்த நிகழ்ச்சியில், 'வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஊக்கு வித்தல்' எனும் தலைப்பில், கல்லுாரி மாணவர்கள் மனித கோபுரம் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் வனச்சரக காப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

மாணவ செயலர்கள் சுந்தரம், செர்லின், ராஜபிரபு, விஜய், கவியரசு ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விலங்குகள் முககவசங்களை அணிந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரம் வினியோகித்தனர். வனச்சரக வன காவலர் சிவமணி மற்றும் பலர் பங்கேற்றனர். மாணவ செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us