ADDED : ஜன 31, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். அரசு துறை டிரைவர்கள் சங்க மாவட்ட தலைவர் முஜீப் உசேன் முன்னிலைவகித்தார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்றனர். பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.