/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு ஊழியர்கள் பேரணி; 'தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வாழ்க்கைக்கான ஊதியம் வழங்க வேண்டும்'
/
அரசு ஊழியர்கள் பேரணி; 'தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வாழ்க்கைக்கான ஊதியம் வழங்க வேண்டும்'
அரசு ஊழியர்கள் பேரணி; 'தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வாழ்க்கைக்கான ஊதியம் வழங்க வேண்டும்'
அரசு ஊழியர்கள் பேரணி; 'தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வாழ்க்கைக்கான ஊதியம் வழங்க வேண்டும்'
ADDED : ஏப் 18, 2025 06:57 AM

திருப்பூர்; அரசு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வாழ்க்கைக்கான ஊதியம் வழங்க வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் பேரணி நடத்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
திருப்பூரில், தென்னம்பாளையம் அரசு பள்ளி முதல் கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி பேரணியை துவக்கி வைத்தார்.
அரசு ஊழியர்கள் திரளானோர் பங்கேற்று, தென்னம்பாளையம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து, கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், விளக்க கூட்டம் நடைபெற்றது.
கடந்த காலங்களில், அரசு துறைகளில் பத்து ஆண்டுகள் தினக்கூலியாக பணிபுரிந்தவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, பத்து ஆண்டுகள் தினக்கூலியாக பணிபுரிந்தோருக்கு, காலமுறை ஊதியம் வழங்கப்படாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம், 15,700 ரூபாயும், ஊராட்சி செயலாளர்களுக்கு அடிப்படை ஊதியம், 17,500 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒடிசா, மணிப்பூர் மாநிலங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்களுக்கு, அம்மாநில அரசுகள் காலமுறை ஊதியம் வழங்கியுள்ளன.
காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்களுக்கு கூட உணவு செலவு மற்றும் பராமரிப்பு செலவாக, 10 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி, தமிழக அரசு கருணை காட்டுகிறது. எனவே, அரசு ஊழியர்களையும் மதித்து, கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள், குடும்ப நல ஆலோசகர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர், துாய்மை காவலர் உள்ளிட்டோருக்கு, வாழ்க்கைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்களுக்கு கூட உணவு செலவு மற்றும் பராமரிப்பு செலவாக, 10 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது