/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பெண்கள் பள்ளி பிளஸ் 2வில் அபாரம்
/
அரசு பெண்கள் பள்ளி பிளஸ் 2வில் அபாரம்
ADDED : மே 09, 2025 06:51 AM
அவிநாசி: அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதிய 181 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளியாக சாதனை புரிந்துள்ளது.
பள்ளியில் படித்த தயாஸ்ரீ என்ற மாணவி, 576 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர், கணினி அறிவியலில் நுாற்றுக்கு நூறு பெற்றுள்ளார்.
இஷாந்திகா 574, மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றார். இவர் கணினி அறிவியலில் சதமடித்துள்ளார். 568 மதிப்பெண் பெற்று காவியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சி புரிந்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியரையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், தலைமையாசிரியை புனிதவதி, உதவி தலைமை ஆசிரியர் திலகவதி மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், அறிவுச்சுடர் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் பாராட்டி வாழ்த்தினர்.