/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு விடுதி மாணவியர் போராட்டம்: கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை
/
அரசு விடுதி மாணவியர் போராட்டம்: கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை
அரசு விடுதி மாணவியர் போராட்டம்: கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை
அரசு விடுதி மாணவியர் போராட்டம்: கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை
ADDED : நவ 25, 2024 10:41 PM

உடுமலை; உடுமலையில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவியர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடுமலை, அரசு கல்லுாரி பகுதியில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, 29 மாணவியர் தங்கி பயின்று வருகின்றனர்.
விடுதி காப்பாளராக உள்ள தேவிகா, மாணவியரை தரக்குறைவாக பேசுவதோடு, வேலைகள் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக கூறி, 19 மாணவியர், நேற்று மாலை, 4:00 மணிக்கு, உடுமலை - எலையமுத்துார் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், உடுமலை கோட்டாட்சியர் குமார், தாசில்தார் சுந்தரம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
இதில், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் தேவிகா, காங்கயத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார், என உறுதியளித்ததையடுத்து, மாணவியர் கலைந்து சென்றனர்.